பாதுகாப்புப் படையினரை தவறாக
வழிநடத்தி இலங்கையில் பதுங்கியிருந்த 'மர்வின் ஜானா என்ற பேக்கரி ஜானா' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினரின் விசேட நடவடிக்கையின்போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவில் குறித்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
இதன்போது, சந்தேக நபர் 17 கிராம் 60 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை காரில் கடத்திச் சென்று கொண்டிருந்தபோது தெஹிவளை, அத்திடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் அதிரடிப படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.