வாரியபொல பிரதேசத்தில்
வாகன விபத்தில் சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவுக்குச் சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில் வாரியபொல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இடத்தில் படம் எடுக்க முற்பட்ட இளைஞரை அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு சொந்தமானது என கூறப்படும் டிஃபென்டர் ரக ஜீப் ஒன்று கடந்த 26 ஆம் திகதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.