முன்னாள் ஜனாதிபதிகளின்
சிறப்புரிமைகளை நீக்கி அவர்கள் சார்பான அரசாங்கத்தின் சுமையை முற்றாக நீக்குவதற்கு தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் சட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பத்தேகமவில் நேற்று (27) நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“வெற்றி பெற்று ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது.இப்போது அவர்கள் சொன்னவை என்னவாகின? அதெல்லாம் பொய் என்று உறுதியாகிவிட்டது.கேஸ் வெடிக்கவில்லை டாலர் 400 ரூபாய்க்கு போகவில்லை. வரலாற்றில் முதல்முறை இலங்கையில் பட்டாசு வெடிக்காமல் வெற்றி கொண்டாடப்படுகிறது.
டொலரின் மதிப்பு 300 ரூபாய்க்கு குறைவாக உள்ளது. எண்ணெய், எரிவாயு வரிசைகள் அனுமதிக்கப்படவில்லை. சர்வதேச உறவுகள் முன்னெப்போதையும் விட வலுப்பெறுகின்றன. சொன்னது அனைத்தும் பொய் என்பதை மக்கள் இன்று அறிவார்கள்.
"அமைச்சர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட வேண்டும். செலவுகள் குறைக்கப்பட வேண்டும். ஜனாதிபதிக்கான செலவுகள் குறைக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் முற்றாக குறைக்கப்பட வேண்டும் என்றார்.