பொத்துவில், அறுகம்பே
பிரதேசத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாகக் கூறி அங்கிருந்தவர்களை பொய்யாக அச்சுறுத்திய நபரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டியில் இருந்து அறுகம்பே பிரதேசத்துக்கு வந்தவர்களிடமிருந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அறுகம்பே பகுதியில் 3 இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாகவும் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அந்த நபர் அவர்களிடம் கூறியுள்ளார்.
இதனைச் சுற்றுலா பயணிகள் பொலிஸில் முறைப்பாடு செய்ததனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவராவார்
குறித்த சந்தேக நபர் பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.