(க.கிஷாந்தன்)

தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது,

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது. எனவே, சம்பள நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். அதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.”- என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

கடந்த ஆட்சியில் குறுகிய காலப்பகுதிக்குள் மலையக மக்கள் தொடர்பில் அரசியல், பொருளாதார மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம். வீடமைப்பு திட்டம்கூட மீள ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு மலையக மக்கள் தொடர்பில் இன்னும் எவ்வித திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.

பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினர் உறுதியளித்திருந்தனர். ஆனால் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளன.  நாம் ஜனாதிபதியை விமர்சிக்கவில்லை. இன்னும் பொருளாதார நெருக்கடி உள்ளது. மக்களும் சற்று பொறுமை காக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க வேண்டும்.

எரிபொருள் விலைகூட கணிசமான அளவு குறையும் என கூறியிருந்தனர். ஆனால் ஓரளவுதான் குறைந்துள்ளது. எமது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கமையவே செயற்பட வேண்டியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் சிலர் இன்று கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவும், ஊக்குவிப்பு தொகையாக 350 ரூபாவையும் பெற்றுதருவோம் என நாம் உறுதியளித்தோம். அதற்கான வர்த்தமானியும் வெளியானது.

தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் நாம் கடந்த ஆட்சியின்போது அடிப்படை சமபளம் ஆயிரத்து 350 ரூபாவுக்கு இணங்கி இருக்காவிட்டால் இன்று அந்த அதிகரிப்புகூட கிடைக்கப்பெற்றிருக்காது. எஞ்சிய தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுப்போம்.

தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது. எனவே, சம்பள நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். அதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.

அதேவேளை கண்டி, உன்னஸ்கிரிய பகுதியில் அரச பெருந்தோட்ட யாக்கத்தால் கடிதமொன்று அனுப்பட்டுள்ளது. 14 நாட்கள் தொடர்;ச்சியாக வேலைக்கு வராவிட்டால் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எமக்கான பிரதிநிதித்துவம் இருந்தால்தான் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் சூழ்ச்சியில் மக்கள் சிக்கக்கூடாது. எமது பிரதிநிதித்துவத்தை மக்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.”- என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி