நடைபெறவுள்ள பாராளுமன்ற
தேர்தலில் போட்டியிடும் நான் தோல்வியடைந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோல்வியாகவும் முழு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் தோல்வியாகவுமே கருதப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான கலாநிதி எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி அல் அக்ஸா சதுக்கத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அடக்கி ஒடுக்கிய முஸ்லிம் சமூகத்தை இம் மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்க்கு அரச நிர்வாக பயங்கரவாதம் மிகத் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்குமான ஒரு பிரதிநிதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு காத்தான்குடி மக்களின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.