அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள்
மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர் கொழும்பு போதைப்பொருள் கடத்தல்காரர் என பயங்கரவாத புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தத் திட்டமிட்ட தாக்குதலின்படி, இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்குச் சென்று அவர்களைக் கத்தியால் குத்துவது போன்ற காயங்களை ஏற்படுத்த திட்டம் இருந்துள்ளதாகவும் இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனவும் பொலிஸ் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
லெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் காசா பகுதியை அழித்தது மற்றும் ஹிஸ்புல்லாவின் தலைவரின் படுகொலை ஆகியவை இந்தத் தாக்குதலைத் திட்டமிடுவதற்கான முக்கிய காரணம்.
எனினும், இந்த நாட்டுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களுக்கு தெரியாமல் இருக்க உளவுத்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து செல்ல முடிவு செய்துள்ளனர் என தெரிய வருகிறது.