யாழ்ப்பாணத்தில் தேர்தல்

பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் , பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தன் பகுதியில் இன்று (26) தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் பிரசசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் முரண்பட்டு அவர்களை தாக்கியுள்ளனர். 

பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள் மீண்டும் 20க்கும் மேற்பட்ட நபர்களுடன் அஅங்கு வந்து , பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் பெண்கள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில், அங்கிருந்து  யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி