மாத்தறை பிரதேசத்தில் காணி

கொள்வனவு செய்தமை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ, அடுத்த விசாரணைத் திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி பெற்றுள்ளார்.

மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

காணி கொள்வனவு செய்யப்பட்ட விதம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணி கனடாவில் வசிக்கும் பசில் ராஜபக்க்ஷவின் மனைவியின் சகோதரியின் பெயரில் ஜேர்மன் பிரஜை ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணியை வாங்க அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

எனினும், பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கத் தவறியதால் இந்த வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவை அடுத்த விசாரணையின்போது அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி