மக்கள் தமக்கான தலைவரை
தெரிவு செய்ததன் காரணமாக இன்று மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிக்கின்றார்.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் உட்பட அனைத்து மக்களும் புதிய நிர்வாகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார்.
மேலும், அனைத்தும் நிறைவாக இருப்பதாக கூறவில்லை, புதிய பயணம் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் சவால்களில் ஒன்று, நாடாளுமன்றத்தை நல்லவர்களைக் கொண்டு நிரப்புவது சவாலாக உள்ளது என்றார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.