இரத்தினபுரி மாரப்பன தலாவ
பிரதேசத்தில் இன்று (26) காலை வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது அந்த வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, குழந்தை மற்றும் அவரது பெற்றோர் உடனிருந்ததாகவும் அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.