(பாறுக் ஷிஹான்)

கல்முனையை துண்டாட நினைத்து
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும் எமது கட்சித் தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க மாட்டார்கள் என திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரும்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளருமான  யஅருள்ஞானமூர்த்தி நிதான்சன்  தெரிவித்தார்.
 
தனது  அலுவலகத்தில் இன்று (26)  நடைபெற்ற  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து  கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது
 
இந்த தேர்தல் காலங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முன்வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நோக்கம் எனக்கு உள்ளது. 
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் என்பவரது கூட்டம் ஒன்றில் தமிழ் மக்களுக்கு எதிரான தீவிரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த கருத்துக்கள் யாவும் ஆக்ரோஷமானதாகவும் தமிழ் முஸ்லிம் மக்களின் இனவாதத்தை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.
 
அத்துடன் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது நேரலைகள் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டதோடு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்திகளை சேகரிப்பதற்கு தடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.இதனால் அன்று அவரால் பேசப்பட்ட விடயங்கள் வெளியாகாத நிலையில் அங்கிருந்து தகவல்களை பெற்றிருந்தோம்.
 
அந்த வகையில் தமிழ் மக்களை ஒரு பயங்கரவாதிகளாகவும் வடக்கு பிரதேச செயலகத்தை பயங்கரவாதிகள் கொண்டு வந்த பிரதேச செயலகமாகவும் கூறி சந்தர்ப்பவாத அரசியலையும் அவரது அனுதாப அரசியலையும் மிக கேவலமாக செயற்படுத்த முயற்சி செய்துள்ளார்.
 
இதற்காக முஸ்லிம் மக்களை உணர்வு ரீதியாக தூண்டி விட வேண்டும் என்பதற்காகவும் அவர் தனது சார்பில்  அனுதாப அலையை அதிகரிப்பதற்காகவும் ஊடகங்களின் சுதந்திரத்தை மறுத்தது மாத்திரமன்றி பல இனவாத கருத்துக்களை விதைத்துள்ளார் என்பது எமக்கு அறியக் கிடைத்துள்ளது.
 
நாங்கள் ஒன்றைக் கூற விரும்புகிறோம். அவர் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து கொண்டு தற்போது அதில் இருந்து விலகியது போன்று நாடகமாடுகிறார் 
 
கடந்த காலங்களில்  தனது தலையை ரணிலுக்கும் வாலை சஜீத்துக்கும் காட்டி  இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது   ஆதரவாளர்களை வேலை செய்ய வைத்துக் கொண்டு அவர்களுக்கான ஆதரவை வழங்கி அவர்களது மேலங்கிகளை அணிந்து   அவர்களின் பின்னால் நின்று கொண்டு  தனது அனுதாப அலையினை உருவாக்கி வருகின்றார்.
 
இது உண்மையான விடயமாகும். அதுமாத்திரமன்றி கல்முனை பகுதியை பகைமையாக காட்டிக்கொண்டு தனக்கு ஆசனம் வழங்கப்படவில்லை என ஹரீஸ் கூறியுள் போதிலும் இன்று அவரை விட இனவாதியான சக்திகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றது. 
 
மேலும், கல்முனை பகுதியில் உள்ள ஒரு பொது நூலகத்துக்கு முன்னாள் அமைச்சர்  ஏ.ஆர்.எம் மன்சூரின் பெயரைச் சூட்டுவதற்காக முயற்சி எடுத்த தரப்புக்கள்  தேர்தல் களத்தில் குதித்துள்ளன. ஏ.ஆர்.எம் மன்சூரின் மகன் ரஹ்மத் மன்சூரின் மகன் இன்று தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். அவர் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து கல்முனை மாநகர சபையின்   ஒரு பிரதி மேயராக இருந்துள்ளார்.
 
கரையோர மாவட்டம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்   யாப்புக் கொள்கையாக இருப்பினும் கல்முனை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படும் வகையில் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ் கிராமங்களுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் கரையோர மாவட்டம் பிரிப்பதற்கு எந்தவொரு இடத்திலும் நாங்கள் அனுமதிக்க  மாட்டோம். 
 
அதனை முன்னிறுத்தி கல்முனை பகுதியில் தேர்தலில் இறங்கி உள்ள வேட்பாளர்களுக்கு எதிராக நான் களத்தில் எப்போதும் இருந்தும் எதிர்ப்பேன் என்பதை கூற விரும்புகின்றேன் என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி