பல்கலைக்கழக மானியங்கள்
ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செய்தி ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று கூறியுள்ளது.
குறித்த பதவிக்கு சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்னவை நியமிக்கப்பட்டது பிரதமர் ஹரிணி அமரசூரியவின் முழுமையான ஆலோசனை மற்றும் சம்மதத்துடன் இடம்பெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், இது தொடர்பான ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தெரிவித்தார்.