பொத்துவில் அறுகம்பே பகுதியில்
இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற கதை அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு மக்கள் கூட அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அப்பகுதியின் நிலைமையை தாங்கள் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளார்.