ஹட்டன் கல்வி வலயத்துக்கு
உட்பட்ட டிக்கோயா பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் 15 வயது மாணவி ஒருவரை பாலியல் சேட்டைக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அந்தப் பாடசாலையின் அதிபர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் மாணவிகளில் ஒருவர் அதிபருக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பிய கடிதத்துக்கு குறித்த அதிபர் அந்த மாணவியை கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் கடைக்கு போவதற்கு வருமாறு அந்த மாணவிக்கு பதில் அனுப்பியுள்ளமை தெரிய வந்ததால், நேற்றைய தினம் பெற்றோர்கள் ஒன்றுகூடி பாடசாலை அதிபரை கைது செய்யுமாறும் பாடசாலையை விட்டு வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிபர் இன்று (26) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.