பொத்துவில் மக்களால் தனது
தேர்தல் பிரசாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அது அப்பட்டமான பொய் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
தனிப்பட்ட அரசியல் நலனுக்கான ஓரிருவரின் தவறான நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த பொத்துவில் மக்களையும் இதற்குள் உள்ளிழுப்பது தவறானது.
பொத்துவில் தொகுதி மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எனது வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பில் உண்மை நிலைமை வெளிப்படுத்தப்பட்டும் தன்மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டுவது தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.