முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
நேற்று (25) கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்த சிறையின் 'எச்' பிரிவில் நூற்றுக்கணக்கான கைதிகளுடன் அவர் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்கிடமான வகையில் BMW ரக கார் ஒன்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.