ஈரானின்இராணுவ இலக்குகள்
மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இஸ்ரேலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியாகி உள்ள வீடியோவில், இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும்் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலும் ஈரானும் அதன் வான்பரப்புகளை மூடியதை அடுத்து ஈராக்கும் தமது வான்பரப்பை மூடுவதாக அறிவித்துள்ளது.