இலங்கை விமான நிலையங்களுக்கு

வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையமும் விமான நிறுவனமும் அறிவிக்கின்றன.  

இந்தியாவில் இருந்து வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு அக்டோபர் 19 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கிடைத்த போலி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
 
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களை இறக்கி சோதனை செய்தனர்.
 
இதனால் யாரேனும் அசௌகரியம் அடைந்திருந்தால் வருந்துகிறோம் என்று விமான நிலையமும் விமான நிறுவனமும் தெரிவித்துள்ளன. 
 
கடந்த சில நாட்களாக ஏராளமான இந்திய விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
இதேவேளை, இந்திய விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக நேற்றைய தினம் மட்டும் சுமார் 80 போலியான அறிவிப்புகள் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த சூழ்நிலை காரணமாக, இந்த போலி அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்களை வழங்கும் நபர்களின் தகவல்களை மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்கு அறிவிக்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி