பலாங்கொடை பாடசாலை
ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று திடீர் சுகயீனமடைந்து பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (25) காலை இந்தப் பாடசாலையைச் சேர்ந்த பெண்கள் சிலர் இரசாயனக் கரைசலைக் கொண்டு பெண்கள் கழிவறையை சுத்தம் செய்திருந்தனர்.
பின்னர் இந்த மாணவர்கள் கழிவறைக்குச் சென்றபோதே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்தனர் என தெரிய வருகிறது.