இரண்டாவது நிறைவேற்று
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3,250,000 ரூபா பெறுமதியான எரிபொருள் கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன.
01.01.2023 முதல் 07.10.2024 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன்களின் மதிப்பு இதுவாகும்.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் உரிமைச் சட்டத்தின்படி, மாதாந்தம் 1200 லீட்டர் டீசல் மற்றும் 750 லிட்டர் பெட்ரோலுக்கு உரிமை உண்டு,
இதன்படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் தற்போது வரை வழங்கப்பட்ட எரிபொருள் கூப்பன்களின் பெறுமதி 3,250,000 ரூபாவாகும்.