ரணில் விக்கிரமசிங்கவினால்
கட்டியெழுப்பப்பட்ட பொருளாதார வேலைத்திட்டத்தினாலேயே நாடு இன்று முன்னோக்கி நகர்ந்து வருகிறது.
அதிகாரத்தைப் பெறுவதற்காக மக்கள் விடுதலை முன்னணி வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
நாட்டில் இன்று அரிசிக்கும் தேங்காய்க்கும் வரிசை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நீர்கொழும்பு கோல்டன் ஸ்டார் ஹோட்டலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிமல் லான்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.