(எச்.எம்.எம்.பர்ஸான்)
ரயிலால் மோதப்பட்டு இளைஞர
ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (24) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் ஏறாவூர் குடியிருப்புப் பகுதியால் செல்லும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், ஏறாவூர் காட்டு மாமரப் பகுதியைச் சேர்ந்த முஜாகித் எனும் இளைஞரே ரயிலால் மோதப்பட்டு மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த இளைஞனின் உடல் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.