இந்தியாவின் மும்பையிலிருந்து
கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (24) வந்தடைந்த விஸ்தாரா விமானம் உள்ளே வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
131 என்ற UK விமானம் மாலை 2.56 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளது.
அந்த விமானத்தில் 108 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த விமானத்தை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
குறித்த விஸ்தாரா விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி இலங்கை வந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் வெடிகுண்டு பீதி காரணமாக குறித்த நேரத்துக்கு முன்னதாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.