முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

பதிவு செய்யப்படாத சொகுசு காரைப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் இங்கிலாந்துக்கு அனுப்புவதாக கூறி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் அது இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை எனவும், போலி இலக்கத்தை பயன்படுத்தி வீதியில் பயணிப்பதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த காரை இலங்கைக்கு கொண்டு வந்தவர்கள் யார், எப்போது கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹில்டன் ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இந்த கார் நிறுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி