ஐக்கிய மக்கள் சக்தி ' தம்முடன்

செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகுவதாகவும் தமது கட்சி பொதுத் தேர்தலில் எந்த வேட்பாளரையும் நிறுத்தாது என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இருதரப்புக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி மீறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த வருட பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியலில் இடம்பெறவிருந்த  நிலையில் அக்கட்சியின் சில செயற்பாட்டாளர்கள் பல மாவட்டங்களில் இருந்து வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவிருந்தனர்.

ஆனால் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்து கட்சியால் முன்மொழியப்பட்ட இரு வேட்பாளர்களையும் நியமிக்காதது இரு கட்சிகளுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி