leader eng

சட்டவிரோதமான முறையில்

பில்லியன் கணக்கான டொலர்கள், சொத்துக்களை சம்பாதித்ததாகக் கூறப்படும் பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்களின் பெயர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ளும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள இந்நாட்டு பிரஜைகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த விசாரணைகள் வலுவாக முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரி ஏய்ப்பு செய்யும் இலங்கை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பில் விசேட விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி விசாரணைகள. ஏற்கனவே ஆரம்பிக ப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்ட சிறப்புத் தகவலின்படி, பண்டோரா கோப்புகளில் வரி ஏய்ப்பு மற்றும் மோசடி தொடர்பான 11.9 மில்லியன் நிதிப் பதிவுகள் வெளியாகியுள்ளன.

வரி ஏய்ப்பு மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டவர்களில் இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 3, 2021 அன்று, புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒன்றியம் இந்த 'பண்டோரா ஆவணங்களை' வெளியிட்டது.

அந்த விசாரணைக்காக 117 நாடுகளில் இருந்து 600 ஊடகவியலாளர்கள் கூடியிருந்தனர்.

சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி ஊடகங்களுக்கு அறிவித்தார், சர்வதேசம் வெளியிட்டுள்ள பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு  வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, பண்டோரா ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரிப்பணம் செலுத்தியமை தொடர்பான கோப்புகள் மற்றும் வரி ஏய்ப்பு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றத்தால் கோரப்பட்டால், உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் அவற்றை வழங்குவதற்குக் கடமைப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்திருந்தார்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி