leader eng

பொருளாதார சுழற்சி காணப்படும் போது, 

பணவீக்கம் குறைந்து, ​​அழுத்தம் குறைந்து பொருளாதாரம் வலுப்பெறும். இவ்வாறான பொருளாதார வளர்ச்சி துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்தினால் போதும் என சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டிலிருந்து அதனை செலுத்துவதாக முன்னாள் அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்ததால் 2028 முதல் இந்த கடனை செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.

அப்போதைய அரசாங்கம் இவ்வாறானதொரு முட்டாள்தனமான முடிவை எடுத்து பொருளாதாரத்தை சுருக்கியுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடைந்ததுடன், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கூட வீழ்ச்சியடைந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சார்பாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் பிரதிநிதிகளை சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்து ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 100 மில்லியன் டொலர்களை மானியமாக பெற்றுக் கொடுத்தோம். இந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும் நாடு மீள வேண்டுமாயின், மக்கள் மீண்டு வர வேண்டுமாயின் பொருளாதாரம் அபிவிருத்தியடை வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஒருவரால் செய்ய முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணித்தோடு இதைச் செய்ய வேண்டும். ஒரு நாடாக நாம் இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டு வருகிறது. பொருளாதாரம் வலுவடைந்து, பொருளாதார செயல்முறைகள் வலுப் பெற்று, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றும் 4 ஆண்டுகளில் கடனை அடைக்க வேண்டும் என்பதால், இதில் கவனம் செலுத்தி, இந்தக் கடன் செலுத்தும் இடைவெளியில் ஆண்டுதோறும் கடனை செலுத்தும் அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு நாட்டில் இருக்க வேண்டும். இதற்கான ஒரே திட்டம் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம், அன்னிய நேரடி முதலீட்டை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் தொழில் திட்டத்தை நாடுவது மட்டுமே என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி