இன்று (07) காலை முதல் பெய்துவரும்

அடை மழை காரணமாக பெல்லன்வில கட்டுஎல மற்றும் ஆற்றுப் பகுதிகளின் தாழ்நிலங்கள் நீரில் நிரம்பியுள்ளன.

அருகில் உள்ள வீதிகள் மற்றும்  வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளதாக கூறுகின்றனர்.
 
இதனால் விஹார மாவத்தையில் இருந்து திரும்பும் இரத்தினபிட்டிய பக்க வீதி முற்றாக நீரில் மூழ்கியதால் மஹரகம - தெஹிவளை பிரதான வீதி நீரில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பழைய வீதி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுகளில் ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் வெளியே வருவதற்கு கூட சிரமப்படுவதாகவும் முதலைகளின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ளதால் முதலைகள் நடமாடும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி