நுவரெலியா பிராந்திய கல்வி

அலுவலகத்தின் கீழ் இயங்கும் கொட்டகலை கேம்பிரிட்ஜ் தமிழ் பாடசாலையில் கிரிக்கெற் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் பாடசாலை கட்டிடத்தின் சுவரிலிருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் 13ஆம் ஆண்டில் கல்வி கற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஷ் (18) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்ஓயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி