leader eng

அவுரா லங்கா நிறுவனத்தின்

தலைவர் விரஞ்சித் தம்புகலகேவின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணப் பதிவேடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குமாறு சந்தேக நபர் விரஞ்சித் தம்புகல சார்பில் விசேட பிரேரணையில் அவரது சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். .
 
ஹெலிகொப்டர் கொள்வனவு செய்வதற்காக நண்பர் ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு 70 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் சந்தேகநபருக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் சந்தேக நபருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
சந்தேக நபரின் வெளிநாட்டுக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கு சந்தேக நபர் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும், யாரேனும் ஒருவரினால் அல்லது கூரியர் சேவை ஊடாக பணத்தை அனுப்ப முடியும் எனவும் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பேமரத்ன தெரிவித்தார்.
 
சந்தேகநபரின் சட்டத்தரணி உபாலி ஜயமான்ன, சந்தேக நபருக்கு மாத்திரமே வெளிநாட்டு வங்கிக் கணக்குகளைத் திறக்கும் திறன் உள்ளதாகவும், அதற்கான இரகசிய குறியீட்டு இலக்கங்களின் வலையமைப்பு உள்ளதால் சந்தேக நபர் வெளிநாடு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி