தனது ஆண் உறுப்பை அறுத்து

மேசையில் வைத்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹபரணை ரயில் நிலையத்துக்கு அருகில் திருகோணமலை வீதியை சேர்ந்த 27  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த தற்கொலை முதலாம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முந்திய நாள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு  சென்றவர் சில சமயங்களில் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான உடல் நிலை காரணமாகவே குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்ததாக உயிரிழந்தவரின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞன் தனது பெற்றோருடன் வசிக்கும் வீட்டை அண்டியுள்ள தனது சொந்த கடை அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி