leader eng

அடுத்த பொதுத்தேர்தலில்

போட்டியிடுவதற்காக தனது கட்சியின் 'அன்னம்' சின்னத்துக்குப் பதிலாக 'காஸ் சிலிண்டர்' சின்னத்தில் போட்டியிட அனுமதிக்குமாறு

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கைக்கு  நேற்று (02)  அங்கீகாரம் கிடைத்துள்ளதாக 'புதிய ஜனநாயக முன்னணி' தெரிவித்துள்ளது.

நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை நீண்ட நேரம் பரிசீலித்து அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 'புதிய ஜனநாயக முன்னணி' ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது.

கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த அனைத்து கட்சிகளும் குழுக்களும் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் நின்று புதிய ஜனநாயக முன்னணியை பரந்த கூட்டணியாக ஸ்தாபிக்க தீர்மானித்திருந்தன.

எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ‘யானை’ சின்னத்தில் போட்டியிடுவது என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகளும் இன்று (03) காலை கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளன


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி