எரிவாயு சிலிண்டர் அல்லது

யானையை தெரிவு செய்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

செயற்குழுவின் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பல விசேட கூட்டங்கள் முன்னாள் ஜனாதிபதியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றதுடன், இவ்விடயங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், ஆசன அமைப்பாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி