இலங்கை மின்சார தனியார்

கம்பனியின் நலன்புரி  பிரிவுக்குச் சொந்தமான வாகனம் ஒன்று, ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்கு  பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாமல் ராஜபக்க்ஷ தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த 27ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலிக்கு அறிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை மின்சார  தனியார் நிறுவனத்தின் நலன்புரி பிரிவுக்குச் சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனம் பழுதுபார்ப்பு பணிக்கு  அனுப்பப்படுவதாக தெரிவித்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு மற்றும் விசாரணை தொடர்பான பி அறிக்கையை சமர்ப்பித்து, வாகன சாரதியின் தொலைபேசி பதிவுகளை பெற்றுக் கொள்ள கொள்ளுப்பிட்டி பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு  அனுமதி வழங்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி