leader eng

நாடாக அனைத்து தரப்பிலிருந்தும்

பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இதனால் பெரும்பாலான மக்களே சிரமங்களை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் தற்போதைய அரசியல் செயற்பாட்டில் நாட்டை நாட்டை வெல்ல வைப்பதே என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பன்முக பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் நாம் தலைமைத்துவம் வழங்குவோம். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் செயற்பாட்டிற்கு பங்களிப்போம். இவ்வாறான நோக்கில் அமைந்த வேலைத்திட்டத்தில் நாட்டை வெற்றியின் பால் இட்டுச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த செயல்முறையை ஒருவரால் செய்ய முடியாது. அனைவரும் தீவிரமாக பங்களிக்க வேண்டும். நாட்டின் மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்கிறது. சீர்குலைக்கவோ அல்லது பிரச்சினைகளை உருவாக்கி அரசியல் வெற்றிகளைப் பெறவோ நாம் முனையவில்லை, முனைய மாட்டோம். மாறாக முற்போக்கான முறையில் செயற்பட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பங்களிப்பை பெற்றுத்தருவோம். பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளில் கடந்த காலங்களில் பயனுள்ள நடவடிக்கைகளை மக்களுக்கு சேவையாற்றி நிரூபித்துள்ளோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு தேசியக் கொள்கையொன்றை முன்னெடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும். ஓய்வுபெற்றோர், பெண்கள் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இது ஓர் பரந்த செயற்பாடு. தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தாலும் இவற்றை புறக்கணித்து நடந்து கொள்ள முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் செயன்முறையில் பழைய காலாவதியான முறைகளை பின்பற்ற மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். இந்த பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு நாம் எல்லா நேரங்களிலும் வலுவான பங்களிப்பை வழங்குவோம். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் வேலைத்திட்டம் இதுவே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி நேர்மையான முற்போக்கான கொள்கையைக் கொண்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இது ஒரு பெரிய முற்போக்கு சக்தியாக மாறும். எமது அரசியல் பின்னடைவைச் சந்தித்தாலும் மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவ தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது தலைமையில் இன்று (28) வெல்லம்பிட்டியவில் இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் கொலன்னாவ தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி