ஜனாதிபதி தேர்தலில்
சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
“நாங்கள் சஜித்துக்காக கடுமையாக பிரசாரம் செய்தோம் ஆனால் அது நடக்கவில்லை.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசநாயக்கா இருப்பார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.
ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பரை அழைத்து, கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்தினேன் என்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
