ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணியில் அங்கம் வகிக்கின்றமை குறித்து பெருமை கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு மத்தியில் இருந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார் என்றும் அவர் கூறுகிறார்.
அதன் பின்னர் இரண்டு வருடங்களில் ஏற்பட்ட மாற்றத்தை எவராலும் மறுக்க முடியாது எனவும், நாடு ஸ்திரத்தன்மைக்கு திரும்பியுள்ளதாகவும், ரூபாவின் பெறுமதி வலுவடைந்து, பணவீக்கம் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீர்திருத்தங்கள் மூலம் அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்தது மட்டுமின்றி, அந்நிய கையிருப்பும் வலுப்பெற்றுள்ளது என்கிறார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள குறிப்பு வருமாறு.
