ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின்

மாமியார் (மனைவியின் தாய்), இரண்டு பிள்ளைகள், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மற்றொரு உறவினர் பெண் ஆகியோர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்கள் செல்லும் விசேட பாதையூடாக துபாய் சென்றுள்ளனர்.

இந்த தகவலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்று காலை 10.05 மணிக்கு டுபாய் நோக்கிப் புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-651 விமானத்தில் இந்தக் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

ஒரு பயணிக்கு 52 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கும் பிரமுகர்கள் செல்லும் விசேட பாதை வழியாக அவர்கள் விமானத்தில் ஏறியுள்ளனர்.

இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமான சேவைகள் இல்லை எனவும் டுபாய் சென்று அமெரிக்கா செல்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-649 விமானத்தில் பெசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி