தேசிய பாதுகாப்பு சபை

இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும்  நடத்துவதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களை அண்டிய பகுதிகளில்  பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத்  தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்புப் பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி