leader eng

இலங்கையின் முன்னாள்

டெஸ்ட் கிரிக்கெற் வீரர் துலிப் சமரவீரவுக்கு எதிராக 20 வருட கிரிக்கெற் தடை விதிக்க கிரிக்கெற் அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

அதன்படி, அவர் WBBL மற்றும் BBL அணிகள் உள்ளிட்ட பிராந்திய கிரிக்கெற் சங்கங்களில் எந்தப் பதவியையும் வகிக்கத் தடை விதிக்கப்படும்.

விக்டோரியா மாகாணத்தில் முன்னாள் மகளிர் கிரிக்கெற் பயிற்சியாளர் துலிப் சமரவீர, தொழில்முறை மட்டத்தில் விளையாடிய ஒரு வீரருக்கு எதிராக தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெற் ஆஸ்திரேலியாவும், கிரிக்கெற் விக்டோரியாவும் ஒரு கூட்டு அறிக்கையில், வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும், துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளது.

துலிப் சமரவீர தொடர்பான தீர்மானத்துக்கு விக்டோரியா கிரிக்கட் நிறுவனமும் வலுவாக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி