leader eng

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான

அமைதியான காலப் பகுதியில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் பியூமி ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

ஐவர் கொண்ட குழு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் அறிக்கைகளின்படி, சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் அகற்றப்படும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் ஆயுதங்களை வைத்திருப்பது, புகைத்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்கா சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி