நம்பிக்கைப் பொறுப்பு (அமானிதம்)

என்ன என்பதை கோடிட்டுக்காட்டியவர் எமது ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப்

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
 
 திங்கள் கிழமை (16)மாலை ஓட்டமாவடியில் "தோப்பாகிய தனி மரம்" என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் 24 ஆவது நினைவேந்தல் நிகழ்வும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடும் ,அமீர் அலி விளையாட்டரங்கில் நடைபெற்றது.
 
அதில்  உரையாற்றிய   முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
 
 ஆன்மீக ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  என்ற பேரியக்கத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக கட்டமைத்துத் தந்தவர். தலைவர் மர்ஹூம் அஷ்ரப். 
 
அவருடைய பாராளுமன்ற உரைகளாகட்டும்,பொதுமேடைகளில் ஆற்றும் உரைகளாகட்டும் அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, இந்த சமூகத்தின் அரசியல் யாப்பு இப்படித்தான் இருக்கின்றதென்பதை தொடந்தேர்ச்சியாக வலியுறுத்திய தலைவர் மர்ஹும் அஷ்ரப் ஆவார்.
 
அவருடைய வழித்தோன்றல்களான நாங்கள் இந்த இயக்கத்தை ஆன்மீக உணர்வோடும் சமூக உணர்வோடும் இன்னுமின்னும்  ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக அதை வளர்த்தெடுக்கும் பாரிய பொறுப்பு, அடுத்தடுத்து வருகின்ற வருடங்களில் உங்களுக்கு மத்தியிலிருந்து திறமையான தலைமைகளை உருவாக்கிக் கொடுக்கின்ற மகத்தான பொறுப்பு இன்று முன்னிலையில் இருக்கின்ற கட்சித் தலைமைகளிடத்தில் இருக்கிறது என்பதை முதலில் இங்கு கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். 
 
கடந்த ஓரிரு வாரங்களாக எங்களது காப்பகத்திலிருந்து பெறப்பட்ட சில காணொளிப் பதிவுகளை "தோப்பாகிய தனி மரம்" என்ற இந்த நிகழ்சியில் முன்னிலைப்படுத்துகின்றேன். 
 
"தோப்பாகிய தனி மரம் " என்ற மகுடத்தை கடந்த பல வருடங்களாக தலைவரின் நினைவேந்தல் நிகழ்வுகளில் தொனிப் பொருள் வாசகமாக நாங்கள் வரிந்து கொண்டிருக்கின்றோம்.
 
  அந்தத் தலைவரின் தனிப்பெரும் ஆளுமையின் அனைத்து குணாம்சங்களையும் நாம் உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அதே வாசகத்தோடு இந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம். 
 
1988ஆம் ஆண்டு பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப்  முதலாவது பாராளுமன்ற தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பே நாங்கள் சந்தித்த ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகும்போது, சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற கட்சியின் எட்டாவது தேசிய மாநாட்டில் தலைவர் அஷ்ரப் பேசிய சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன். 
 
எட்டாவது தேசிய மாநாட்டில் தலைவர் அஷ்ரப் உரையாற்றும் போது அவருக்கு 40 வயது.அந்த வயதில் இந்த நாட்டில் இந்த இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாக அமைந்த கட்சியின் மாநாட்டின்  அவரின் உரையை நீங்கள் செவிமடுத்தால் ,அவரது மனத்திடம், திடவுறுதி,தன்னம்பிக்கை என்பவற்றுடன் அமைத்திருந்த புதிய பாதை  புலப்படும்.
 
 உண்மையான குணாம்சங்களைப் பற்றி அவர் விபரிக்கும் விதத்தையும் அவற்றையெல்லாம் கூர்மையாகப் பார்க்கவேண்டிய கடப்பாட்டையும் இன்றைய நமது இளைஞர்கள் கையாள வேண்டியிருக்கின்றது .
 
இந்த இயக்கத்தை அவர் ஆரம்பித்தபோது ஒரு புதிய  பாரம்பரியத்தை கொண்டு  முஸ்லிம் சமூகத்தைக் கட்டமைக்கப்போவதாக அவர் பேசும்போது, மிகத் தெளிவாக அடையாளம் காட்டுகிறார். 
 
ஒரு சமூகத்தின் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றி மூன்று பேராக அல்லது ஒரு குழுவாக இருக்கும்போது ஒருவரைத் தலைவராக(அமீர்)நியமித்துக் கொள்ளவேண்டும் என்ற அந்தக் கட்டுப்பாட்டை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். என்ற இஸ்லாமிய கோட்பாட்டின்கீழ் 1986ஆம் ஆண்டு கொழும்பு" பாஷா விலா"வில் உருவாகிய எமது இயக்கம் இரண்டு வருடங்களுள் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கி அந்த வருடம் இந்த மாநாட்டின் பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியை பெற்றதென்பதையிட்டு நாங்கள் எல்லோரும் புளகாங்கிதமடைய வேண்டும்.
 
தலைமைத்துவத்தின் நம்பிக்கைப் பொறுப்பு( அமானிதம் )என்னவென்பதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார் என்பது மாத்திரமல்ல , இன்று தலைமைத்துவத்தில் இருக்கும் எல்லோருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கின்ற மிக முக்கிய செய்தியொன்றை அவர் விடுக்கின்றார்.
 
இது இலகுவான அமானிதமல்ல. ஒரு சமூகத்தின் மிகப்பெரிய பொறுப்புக்களை நாங்கள் சுமந்திருக்கின்றோம். அதை நாங்கள் வழிநடத்துகின்றபோது எவ்வாறு நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்கள் அன்று ஸஹாபா பெருமக்களிடம் நம்பிக்கைப் பொறுப்பு (அமானிதம்) குறித்து இந்த விபரங்களை சொன்னார்கள் என்பதை மிகத் தெளிவாக அடையாளம்காண வேண்டும்.
 
அண்மைக் காலமாக நான் எமது அரசியல் பொறுப்பாளர்களிடம் சொல்லும் விடயம், அமானிதம் எனும் மிகப் பெரிய பொறுப்பை மீறுகின்றபோது,மிகப் பெரிய அனர்த்தத்தை நாங்களே விளைவித்துக்கொள்கின்றோம் என்பதை ஆரம்ப கட்டத்திலேயே சொல்லுவது, அன்றிருந்த பேரினக்கட்சிகளில் தலைவர்களாக தெரிந்தெடுப்பவர்களைப் பற்றிய விடயத்தில் அவர்களும் அவர்களின் பொறுப்புக்களை புரிந்து கொள்ளவேண்டும். அதனை மாறி செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கவேண்டும் என மிக ஆணித்த்தரமாக சொல்கிறேன்.
 
 இந்தக்கட்சியின் முதலாவது பாராளுமன்ற தேர்தலைச் சந்தித்தற்கு முன்பே  அன்று பிரதமராக இருந்த ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ரணசிங்க பிரேமதாசவோடு இரவு ஒன்பது மணியிலிருந்து பன்னிரெண்டு மணிவரை வாதாடிப் பெற்றுக் கொண்ட மிகப் பெரிய சாதனையை மீண்டும் மீண்டும் பல மேடைகளில் பேசிக் கொண்டு வருகின்றோம். ஆனால் அப்பொழுது  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்கூட இல்லாத நிலையில், இந்த மாநாடு நடக்கின்றபோதும் பேச்சுவார்த்தை நடக்கின்ற போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு இருந்தது வடகிழக்குக்கு வெளியே  மாகாண சபை தேர்தலில் 12 ஆசனங்கள்தான்.
 
IMG 20240918 191114 800 x 533 pixel
 
 ஆனாலும் இந்தக்கட்சியின் வீரியமான தலைமையும் அதனுடைய செல்வாக்கும் வடகிழக்கிலும் வடகிழக்குக்கு வெளியிலும் வியாபித்திருக்கின்றதென்பதை அடையாளம் கண்ட ஆர் .பிரேமதாச இந்த நாட்டின் அரசியல் யாப்பில் இருந்த மிகப் பெரிய தடையை சிறுபான்மை சமூகங்களுக்கு மாத்திரமல்ல,  இன்று ஆட்சிக் கதிரைகளை நாடி நிற்;கின்ற வேறு சிறு கட்சிகளுக்கும் அரசியல் அடையாளத்தை நிலை நிறுத்துவதற்கு பெற்றுக் கொடுத்த பேரியக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  இருந்து சாதித்தபோது தலைவர் அஷ்ரப்வெறுமனே 40 வயதையுடைய இளைஞர்மாத்திரமல்லர், மிக திடமாகவும் உறுதியாகவும் பாராளுமன்ற தேர்தலில் இருந்த12 சதவீத வெட்டுப்புள்ளியை 5 சதவீத மாக குறைத்தது மாத்திரமல்ல, மாகாண சபை தேர்தலுக்கு இருந்த  வெட்டுப்புள்ளியையும் முழுமையா இல்லாமல் செய்து நாடு முழுவதும் இந்த இயக்கத்தை பலமானதாக  வளர்ப்பதற்கும், சமூகத்துக்கு போதிய அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அடிகோலிய மாபெரும் இயக்கம் நமது இயக்கமாகும். அதற்கு தலைமைத்துவம்  வழங்கிய பெரும் தலைவரின் சாதனையை நாங்கள் என்றும் மறந்து விட முடியாது.  
 
 சம்மாந்துறையில் கட்சியின் 14வது மாநாடு நடைபெற்றபோது,மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்  ஆற்றிய உரையில்  இரண்டு கட்சிகளுக்கும் அடுத்த பலம் வாயந்த கட்சியாக ஒன்று இருக்குமானால் ,அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் என்றார்.  பெருந்தலைவருடைய அரசியல் என்பது வெறும் பன்னிரெண்டு வருடங்களே. ஆறுவருடம் எதிர்க்கட்சி ஆறு வருடம் ஆளும்;கட்சி. அதனுள் இறைவன் அவரை எங்களிடமிருந்து கைப்பற்றிவிட்டான்.  பன்னிரெண்ட வருடங்களுக்குள் எங்களுடைய பெருந்தலைவரின் சாதனைகள் சாமான்யமானதல்ல. எதிர்க்கட்சியில் இருந்தபோது பாராளுமனறத்தில் அவரது ஆக்ரோஷமான உரைகள் தான் இந்த கட்சியை கட்டமைத்தது. 
 
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி