leader eng

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த சம்பத் கமகே, அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம, பனாகொட சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேலும், திருமணத்துக்குப் புறம்பான உறவு குறித்த விடயங்களும் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
முச்சக்கரவண்டியில் வந்த நபரொருவர் தலையில் தடியால் தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த சம்பத் கமகே ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
 
உயிரிழந்தவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி ஹினிதும தொகுதியின் பிரதம அமைப்பாளராக இருந்தவர் என்றும் இரண்டு வாரங்களுக்கு முன்னர்சஜித் பிரேமதாசவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததாகவும் நுகேகொட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி