leader eng

ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன்,

சுமந்திரன் இவர்கள் எல்லாம் ஒரு ஏஜென்ட். இவர்கள் கட்சிகளை வைத்து வியாபாரம் செய்பவர்கள். தமிழ் சமூகத்தை சீரழித்து வருபவர்கள் என வட மேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்தார்.

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மிக தெளிவாக உள்ளனர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவும் எனது பார்வையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என பிரச்சார பணிகளை முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் அனைத்து மக்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். அம்பாறை மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராஜேஷ்வரனும் ஜனாதிபதிக்கு ஆதரவான பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

வடக்கிலும் அடைக்கலநாதனும் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றார். அறிக்கைகளுக்கு அப்பால் சுமந்திரனை தவிர அவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ரவூப் ஹக்கீம் சுமந்திரன் போன்ற ஒரு நபர் தான். ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், சுமந்திரன் இவர்கள் எல்லாம் ஒரு ஏஜென்ட். இவர்கள்தான் தமிழ் சமூகத்தை சீரழித்து வருபவர்கள். இவர்கள் மூவரும் சிறுபான்மை சமூகத்தினால் துரத்தி அடிக்கப்பட வேண்டியவர்கள். 

எமது பகுதியிலுள்ள வளங்கள் பற்றி ஜனாதிபதிக்கு நன்கு தெரியும் ஆனால் சஜித் அனுரவிக்கு நமது பகுதிகளைப் பற்றி கொஞ்சம் கூட அறிவே கிடையாது எதிர் அணி வேட்பாளர்கள் நாட்டில் ஒரு நிதி அமைச்சராக கூட உரிய பதவிகளை வகிக்காதவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய் ராஜபக்ச அனுபவம் இல்லாமல் இந்த நாட்டை எவ்வாறு குட்டி சுவராக்கியவர் என்று எங்களுக்கு நன்கு தெரியும். 

தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். சுமந்திரனை தவிர சுமந்திரனும் ஹக்கீமும் இயலும் என்றால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நின்று வென்று காட்டட்டும். நான் இதை சவால் விடுக்கிறேன். இவர்கள் கட்சிகளை வைத்து வியாபாரம் செய்பவர்கள். இவர்களை துரத்தி அடித்தால் தான் தமிழ் முஸ்லிம் உறவுகள் கூட வலுப்பெறும் என்றார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி