தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்

பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு, நாடாளுமன்றம் கலைக்கப்படும் என மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுர ஜனாதிபதியான பின்னர் கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள லக்மன் நிபுனாராச்சி புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் 4 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்கலாம், ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்படுவார், அது, ஒரு பெண்ணாக இருக்கலாம்.

சுவிட்சர்லாந்தில் ஏழு பேர் கொண்ட அமைச்சரவை மட்டுமே இருப்பதாக சுட்டிக்காட்டிய விஜித ஹேரத், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை நான்கு பேர் கொண்ட அமைச்சரவை இரண்டு மாதங்களுக்கு இயங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள் யாராவது இருக்கிறார்களா என மக்கள் கேள்வி எழுப்புவதாக கூறிய அவர், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த கலாநிதிகள், பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என பல தொழில் வல்லுநர்கள் தமது கட்சியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி