leader eng

(பாறுக் ஷிஹான்)

வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கி பிரயோகத்தில்  இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
 
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
 
 திங்கட்கிழமை (16) இரவு 10.45 மணியளவில்  குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
 
 ரிப்பிட்டர் ரக  துப்பாக்கியே  குறித்த படுகொலைக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது.
 
சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரான   சகோதரரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
 பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி