leader eng

நாட்டின் பொருளாதாரத்தை

ஸ்திரப்படுத்தி, தற்போது 75% தொங்கு பாலத்தின் பயணத்தை எட்டியுள்ளதுடன், தொங்கு பாலத்தின் பயணத்தை முடித்து, மீண்டும் வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்க வேண்டுமென்றால், கட்சி நிற பாகுபாடின்றி  இந்த நாட்டு அனைத்து மக்களும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

க்ருஷா ஒரு நதாலியாவை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், தான் இரண்டு நதாலியாக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும், இருவரும் குழந்தையின் உரிமைக்காக குரல் கொடுத்தாலும், தொங்கு  பாலத்தின் பயணத்தை முடித்து நாட்டை வெல்வேன் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அம்பாறையில் இன்று (16)  இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

‘’இன்று நாம் மிக முக்கியமான தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த தேர்தல் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்றே கூற வேண்டும்.

வளமான, சிறந்த  பொருளாதாரம் கொண்ட நாடு வேண்டுமா அல்லது வரிசை யுகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் தீர்மானிக்க வேண்டும். எனவே, மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்லாமல்  நாம் அனைவரும் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மேடையில் என்னை எப்போதும் விமர்சித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான மேடைகளில் இருந்தவர்கள் எங்களை அரசியல் ரீதியாக விமர்சித்தனர். ஆனால் எல்லோரும் முடியாது என்று ஓடியதும் நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டை முன்னேற்றினோம்.

நாங்கள் யாரும் அரசியலைப் பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்களை வாழவைக்க விரும்பினோம். நாட்டு மக்கள் உணவு, மருந்து இன்றி தவிக்கும் போது, எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக வரிசையில் நின்று தவிக்கும் போது சஜித்தும் அநுரவும் அவர்கள் படும் துன்பத்தை கண்டுகொள்ளவில்லை.

ஆனால், மக்கள் படும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசியலை ஒதுக்கிவிட்டு, மக்களை வாழவைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றிணைந்தோம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பினோம்.

உலகில் பொருளாதாரம் சரிந்த ஏனைய நாடுகளைப் பார்க்கும் போது, அந்த நாடுகள் எதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஆனால், நாங்கள் அந்த சாதனையை செய்தோம். இப்போது நாம் இந்த நாட்டை 2022இல் இருந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அதன்மூலம் இந்த அம்பாறை திகாமடுல்ல பிரதேசத்தை பாரிய அபிவிருத்திக்கு கொண்டுவருவோம். மகாவலியால் கைவிடப்பட்ட பகுதிகள் விவசாயத்திற்காக திறக்கப்படுகின்றன. மேலும், கடலில் மீன்பிடி தொழில்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. அதேவேளை, பானம தொடக்கம் நிலாவெளி வரையிலான அபிவிருத்தியடைந்த சுற்றுலா வலயம் உருவாக்கப்படும்.

இந்த நாட்டு மக்கள் கஷ்டப்படும் போது இந்த இரண்டு நதாலியாக்கள் எங்கே இருந்தார்கள் என்று கேட்கிறேன். எங்கள் பயணத்தை தொங்கு பாலத்தில் முடித்துவிட்டு இரண்டு நதாலியாக்களை வெளியேற்றுவோம் என்று மக்களுக்குச் சொல்கிறேன். நாடு பெற்றுள்ள இந்த பொருளாதார வெற்றியை கட்சி, நிற பேதமின்றி அனைவரும் பாதுகாப்போம். அதற்கு கேஸ் சிலிண்டருக்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி