leader eng

இதற்கு முன்னர் இந்த ஒரு

தோ்தல் மல்யுத்தமாகும். இன்று 2024 இல் அது ஒரு சில வளவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போராட்டமாக மாறியுள்ளது. 

தேசிய மட்டத்திலிருந்து ஊர்கள் வரை இந்த போராட்டம் வியாபித்துள்ளது. இதுவரை காலமும் ஒரு சில குடும்பங்களே இந்த நாட்டை ஆட்சி செய்தன. ஆனாலும் நாட்டுக்கு எதையாவது செய்திருந்தால், மக்களை துன்ப துயரங்களிலிருந்து மீட்டெடுத்திருந்தால் பரவாயில்லை. பல தசாப்தங்களாக  நான் உள்ளிட்ட அனைவரும் இந்த அனர்த்தத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சிறிய மனிதர்கள் என்றாலும் திடசங்கற்பம் கொண்டவர்கள். நோக்கத்தை கைவிடாதவர்கள்.
 
இவ்வாறு தெரிவித்தார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸ்ஸா நாயக்க
 
நாடு அநுரவோடு தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் தம்புத்தேகமவில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,
 
நான் இந்த அரசியல் பயணத்தை 1988 இல் தம்புத்தேகம மத்திய மாகாண பாடசாலையில் கல்வி பயின்ற காலத்திலிருந்தே தொடங்கினேன். அந்த பயணம் தற்போது 36 வருடங்களாக தொடர்கிறது. 
 
நாங்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ளோம். எங்கள் நண்பர்கள் எங்கள் கண்ணெதிரில் இறந்ததை கண்டிருக்கிறோம். மரணம் எங்கள் வீட்டுக் கதவுகளை தட்டிக்கொண்டிருந்தது. 
 
எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. 1994 இல் இருந்து நாங்கள் மீண்டும் ஓரளவு தலைத்தூக்கத் தொடங்கினோம்.
 
வெற்றிகளை பெற்றோம். பின்னடைவுகளை சந்தித்தோம். ஒரு சிலர் எம்மை விட்டு நீங்கிச் சென்றார்கள். குறைகூறல்கள் வந்தன. பொய்யான தகவல்கள் வரத்தொடங்கின. சதி வேலைகள் இயங்கத் தொடங்கின. 
 
எனினும் இந்த முயற்சியில் எங்கேயாவது என்றாவது ஒரு நாள் வெற்றிபெறுவோம் என்கின்ற கடுமையான திடசங்கற்பத்தை நாங்கள் கைவிடவில்லை. இந்த 36 வருடங்களுக்குள் நான் 24 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறேன்.
 
நாங்கள் இந்த அரசியலிலியிருந்து ஒரு சதத்தைக்கூட ஈட்டிக் கொள்ளாதவர்கள். பொதுப்பணத்தில் ஒரு சதம் கூட விரயம் செய்யாதவர்கள். நாங்கள் எவருமே தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏதாவது ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் அரசியல் புரிய வந்த மனிதர்கள் அல்ல. நாங்களும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று பட்டம் பெறுகிறோம். தொழில் ஒன்றை புரிந்து தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்க்கைத்தரத்திற்கு அமைவாக வாழ்க்கையை நடாத்திச் செல்லக்கூடிய மனிதர்கள். 
 
இந்த மேடையில்  இருக்கின்ற தோழர் வசந்த சமரசிங்கவும் அப்படித்தான். எங்களுக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள கல்வி மூலமாகவும் பாதைகள் நிலவின. அரசியல் பக்கத்திலும் பாதைகள் இருந்தன. எனினும் இந்த நாட்டையும் மக்களையும் இந்த அனர்த்தத்திலிருந்து மீட்டெடுக்கும் நற்பணியை ஒரு புறம் ஒதுக்கிவைக்க எங்களுக்கு தார்மீக உரிமை கிடையாது. 
 
எங்களுடைய ஊர் மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பிறக்கிறார்கள் ஏதாவது செய்கிறார்கள் செத்து மடிகிறார்கள். எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையா தேவை? கிடையாது. எங்கள் மக்களுக்கு தமது வாழ்நாளில் மகிழ்ச்சியாக நல்ல உணவு வேளையொன்று, ஆரோக்கியமான வாழ்க்கை, பொழுதுபோக்கு, மகிழ்ச்சி தேவையில்லையா? அந்த வாழ்க்கை அந்த வர்க்கத்தை சோ்ந்தவர்களுக்கு மாத்திரம் தான் உரித்தானதா? எமது ஊரில் உள்ளவர்களுக்கு அந்த வாழ்க்கை உரித்தற்றதா? 
 
நீங்கள் இயலுமானவரை இந்த பெருநிலத்துடன் மல்லுகட்டுகிறீர்கள். விளைச்சலை விற்பனை செய்ய எவ்வளவோ கஷ்டப்படுகிறீர்கள்? எனினும் அவர்கள் மேலே இருந்துகொண்டு பொது திறைசேரியின் பணத்தை எப்படி திருடுவது? என திட்டம் தீட்டுகிறார்கள். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்நோக்குகிறீர்கள். அவர்கள் ஒரு டீல் மூலமாக கொழும்பில் மிகவும் சொகுசான அப்பாற்மண்ட் ஒன்றை கொள்வனவு செய்கிறார்கள். ஒரு கொடுக்கல் வாங்கலில் துபாயில் இங்கிலாந்தில் அவுஸ்ரேலியாவில் வீடுகளை வாங்குகிறார்கள். அமெரிக்காவில் வீடுகளை வாங்குகிறார்கள். 
 
நீங்கள் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுக்கிறீர்கள். உங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள். அவர்கள் நாட்டின் செல்வத்தை வாரிச்சுருட்டிக் கொள்கிறார்கள். அது தான் இந்த முறைமை. நாங்கள் சிறுபராயத்தில் இதனை அவ்வளவு ஆழமாக காணவில்லை. ஆனால் இந்த அரசியலை மாற்ற வேண்டுமென எமக்கொரு ஆசை இருந்தது.
 
அத்தகைய அரசியலில் தொடர்ச்சியாக ஈடுபடுகையில் இவர்கள் எவ்வளவு வெட்கமில்லாத மனிதர்கள் என்பதை நாங்கள் கண்டோம். நான் 24 வருடங்களாக  பாராளுமன்றத்தில் இருக்கிறேன். அங்குள்ள அனைவரது வண்டவாளங்களையும் நான் அறிவேன். அவர்கள் எப்படி தமக்கும் தமது குடும்பத்திற்கும் வழிசமைத்துக்கொள்வது எனப்பார்ப்பார்கள். மக்களுக்கு குழிதோண்டி அவர்களின் எதிர்காலத்திற்கான பாதையை அமைத்துக் கொள்கிறார்கள் என்றார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி