leader eng

சர்வதேச நாணய நிதியத்துடன் 

இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள  ஒப்பந்தம் குறித்தும், அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் வீடியோ   கலந்துரையாடலை மேற்கொள்ள தான் தயார் என்றும், இதில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட தரப்பினருக்கு  இந்த கலந்துரையாடலில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்க முடியும் என்றும்  ஐக்கிய தேசியக் கட்சியின்  கடசி மாநாட்டின்போது  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பொருளாதார பிரச்சினையை  புரிந்து கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன்  கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்று  2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தெரிவித்திருந்தது.
 
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மற்றும் கட்சியின்  பொருளாதாரக் கொள்கை  வகுப்பாக்க உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறது.
 
அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண மக்களை பாதிக்கின்ற  நிபந்தனைகள் குறித்து,  அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள்  சக்தி ஆலோசனைகளை முன் வைத்திருக்கின்றது.
 
சர்வதேச நாணய நிதியத்தின்   பரிந்துரைகள் மற்றும்  நிபந்தனைகள் என்று நாட்டு மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  செயற்பாடானது சர்வதேச நாணய நிதியத்தின்  உண்மையான கருத்தாக இருக்கவில்லை என்பது  எமக்குத் தெரியும்.
 
எனவே, எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறான கலந்துரையாடலாக இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்குத் தயார் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
ரஞ்சித் மத்தும பண்டார(பா.உ) 
பொதுச் செயலாளர் 
ஐக்கிய மக்கள் சக்தி


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி